Wednesday,24th of April 2013
சென்னை::விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் நடிகராகஅறிமுகமாகி , இங்க என்ன சொல்லுது’ என்ற வசனத்தின் மூலமும் , தனது வித்தியாசமான வசன உச்சரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த விடிவி கணேஷ் தற்போது தனது நிறுவனமான விடிவி புரொடக்ஷன்ஸ் மூலம் தன்னை பிரபலமாக்கிய ’இங்க என்ன சொல்லுது’ என்ற தலைப்பில் ஒரு நகைச்சுவைப் படத்தை தயாரிக்கிறார் .
அவரே இப்படத்தின் கதாநயாகனாகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மினும், முக்கியகதாபாத்திரத்தில் ஸ்வர்ணமால்யாவும் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் கணேஷுக்கு இணையான கதாபாத்திரத்தில் இதுவரை பார்த்திருக்காத வரையில் ஒரு கதபாத்திரத்தில் நடித்து நம்மை கவர உள்ளார் சந்தானம் .
இவர்களுடன் பாண்டியராஜன், ஸ்ரீநாத், மயில் சாமி ஆகியோரும் நடித்து வருகின்றனர் . சென்னையிலும், மலேசியாவிலும் படமாக்ககப்பட்டு வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை ‘காக்க காக்க , பில்லா 2,’ மற்றும் பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த R .D .ராஜசேகர் ஏற்றுள்ளார் .
ராஜீவன் கலை இயக்குனராகவும், ஆன்டணி படத்தொகுப்பாளராகவும் பணியாற்ற, ‘வானம்’ படத்தின் வசனகர்த்தா ஞான கிரியின் வசனம் எழுத, தரன் இசை அமைக்கிறார்.
விஜய் நடித்த ‘ப்ரியமுடன் , யூத்’ ஆகிய படங்களை இயக்கியவின்சென்ட் செல்வா இப்படத்தை செல்வா என்ற பெயரில்
Comments
Post a Comment