Monday,22nd of April 2013
சென்னை::'கோச்சடையான்' படத்தில் ரஜினியின் கெட்டப்பை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதுவரை அப்படத்தின் ஸ்டில்கள் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது முதல் தடவையாக ரஜினியின் மகளும் 'கோச்சடையான்' படத்தின் டைரக்டருமான சவுந்தர்யா ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் ரஜினி, தந்தை-மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். அவ்விரு கெட்டப் ஸ்டில்லையும் சவுந்தர்யா வெளியிட்டுள்ளார். ரஜினியின் இரட்டை வேடம் குறித்து சவுந்தர்யா கூறும் போது, ''படத்தில் தந்தையாக வரும் ரஜினிதான் 'கோச்சடையான்'. நாட்டின் படைத்தளபதியாக வருகிறார். பரதம் ஆடவும் தெரியும். மகன் ரஜினியாக வருபவர் பெயர் பாணா. தந்தையை காட்டிலும் நூறு மடங்கு வேகம் உள்ளவர். எப்போதும் பரபரவென இருப்பார்'' என்றார்.
'கோச்சடையான்' படத்தை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். ஆங்கிலத்தில் வெளியான 'அவதார்', 'டின்டின்' படங்களை போன்று அனிமேஷன் படமாக 'கோச்சடையான்' தயாராகியுள்ளது. இதில் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப், நாசர் போன்றோரும் நடிக்கின்றனர்.
மகன் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே வருகிறார். தந்தை ரஜினி ஜோடியாக ஷோபனா நடிக்கிறார். ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டு இப்படத்தை எடுத்துள்ளனர். டப்பிங், ரீ-ரிக்கார்டிங் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

Comments
Post a Comment