தலைவன்’ படத்தின் நாயகி சுற்றி வளைப்பு!!!

 Sunday,14th of April 2013
சென்னை::புதுமுகம் பாஸ், நிகிஷா பட்டேல், சந்தானம் நடிக்கும் படம் ‘தலைவன்’. ‘உளவுத் துறை’ ரமேஷ் செல்வன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம், ஆலப்புழாவில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் கூட்டம் அதிகம் இருந்தது. நிகிஷா பட்டேல் படப்பிடிப்பு முடிந்து கிளம்புகிறார் எனத் தெரிந்ததும் ரசிகர் கூட்டம் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு முற்றுகியிட்டனர். ஒரு சிலருக்கு மட்டும் அவர் ஆட்டோகிராப் போட்டு, கிளம்பிச் செல்ல முயன்றார்.
ஆனால், ரசிகர்கள் அவரை விடவில்லை. சுற்றி வளைத்துக் கொண்டனர். கார் டிரைவர் ரசிகர்களை விலக்கி விட முயன்றார். இதனால் அவருக்கும் , ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
பின்னர், விஷயமறிந்து தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன், இயக்குனர் ரமேஷ் செல்வன், மேனேஜர் சிவசங்கர் அங்கு சென்று ரசிகர்களை சமாதானப்படுத்தினர்.
இதனால், பதட்டமான சூழ்நிலை நிலவியதால் இன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

Comments