Thursday,25th of April 2013
சென்னை::காதல் தோல்வி பாடலுக்கு சம்பளமே வாங்காமல் நடித்தார் நயன்தாரா.பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் ‘எதிர்நீச்சல்‘ என்ற படத்தை முதன்முறையாக தயாரிக்கிறார் தனுஷ். இப்படத்தின் ஹீரோ சிவ கார்த்திகேயன் காதல் தோல்வியில் வேதனையாக இருக்கும் நேரத்தில் ‘சத்தியமா நீ எனக்கு தேவையில்ல... பத்து நாளா சரக்கு அடிச்சேன் போதையே இல்ல‘ என்ற குத்து பாடல் இடம்பெறுகிறது.
இப்பாடலுக்கு நடனம் ஆடி நடிக்க தனுஷ் முடிவு செய்தார். ஜோடியாக ஆட நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என்று தனுஷ் யோசனை கூறினார். இதுபற்றி நயன்தாராவிடம் தனுஷும் இயக்குனர் துரை செந்தில்குமாரும் கூறியபோது உடனடியாக நயன்தாரா ஒப்புக்கொண்டார். அத்துடன் இந்த பாடலுக்காக சம்பளம் எதுவும் அவர் வாங்கவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப அணிய வேண்டிய காஸ்டியூமை கூட நயன்தாராவே எடுத்து வந்துவிட்டாராம். பிறகு இப்பாடல் படமாக்கப்பட்டது. இந்த தகவலை இயக்குனர் துரை செந்தில்குமார் கூறினார்.

Comments
Post a Comment