Saturday,13th of April 2013
சென்னை::பெரும்பாலான நடிகைகள் தங்கள் திருமணத்தை, மிகவும் தடபுடலாக திரையுலகமே வியக்கும் வண்ணம் நடத்த வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், பிரபல பாலிவுட் நடிகை நேகா துபியாவோ, தனது திருமணத்தை எளிமையாக நடத்த விரும்புவதாக மனம் திறந்துள்ளார்.
இந்திய சர்வதேச ஜூவல்லரி வாரத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நகை கண்காட்சியில் கலந்துகொண்ட நேகா துபியா, மணப்பெண் போன்று நகைகள் அணிக்கு ஒய்யாரமாக வலம் வந்து பார்வையாளர்களை கவர்ந்தார்.
பின்னர் அவர் பேசுகையில், “சினிமாத் தொழிலில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நாங்கள் திருமணம் செய்கிறோம். எனது சொந்த வாழ்க்கையில் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த விரும்பவில்லை. எளிமையாக நடத்தவே விரும்புகிறேன்.
திருமணத்தின்போது மேக்அப் மற்றும் அலங்கார உடையுடன், தலை முதல் பாதம் வரை ஏராளமான நகைகள் அணிந்தால் அலங்கோலமாக இருக்கும். அதனை நான் விரும்பவில்லை. நகைகளால் ஏற்படும் அசவுகரியத்தையும் விரும்பமாட்டேன். எனது திருமண நாளில் எளிமையாக இருக்க விரும்புகிறேன்” என்றார்.
32 வயதான நேகா துபியாவின் அடுத்த படம் ‘ரங்கீலே’ மே 16-ம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment