இசையில் வசமான ஹன்சிகா!!!

Friday,5th of April 2013
சென்னை::ஹன்சிகா, இயற்கையாகவே, அதிக இசை ஆர்வம் கொண்டவராம். படிக்கும் காலத்திலேயே, சினிமா பாட்டென்றால்,  அவருக்கு உயிராம். தனக்கு, விருப்பப்பட்ட பாடல்களை, பள்ளி விழாக்களில் பாடி, பரிசுகள் கூட வாங்கியுள்ளார். அதனால், தான் நடிக்கும் படங்களில், பாடல் காட்சிகளை படமாக்குகின்றனர் என்றால், அந்த பாடல்களை, நிஜமாலுமே மனப்பாடம் செய்து, பாடி நடிக்கிறாராம் ஹன்சிகா.மேலும், வீட்டில் இருக்கும் போது, ஹன்சிகாவின் படுக்கை அறையில்,  எந்நேரமும் இசைதான் நிரம்பி வழியுமாம். காரில் பயணிக்கும்போதும், மனதுக்கு பிடித்த பாடல்களை போட்டு, கேட்டு ரசிப்பதுடன், பாடல் ஒலிக்கும்போது, தானும் சேர்ந்து பாடுவாராம். தனக்கு அதிக பிடித்தமான பாடல்கள் ஒலித்தால், தன்னை மறந்து இசையோடு கலந்து, குஷியாட்டம் ஆடத் துவங்கிவிடுவாராம் ஹன்சிகா.சமீப காலமாய், அவரது வீட்டில் தமிழ்ப்பட பாடல்கள் தான் அதிகம் கேட்கிறதாம்.

Comments