நிறைய படங்களில் நடிக்க அவசரமில்லை – டாப்ஸீ!!!

Tuesday,16th of April 2013
சென்னை::ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸீ. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
 
ஹிந்தியில் ‘சாஷ்மி பத்தூர்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே ஹிட் வரிசையில் சேர்ந்து விட்டதால் டாப்ஸீயை தங்களது படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளனர்.
ஆனால், டாப்ஸீயோ இதுவரை எந்த புது ஹிந்திப் படங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
 
தற்போது அஜித் நடிக்கும் படத்திலும், மற்றும் சில தெலுங்குப் படங்களிலும் நடித்து வரும் டாப்ஸீ, இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும்தான் அடுத்து என்ன படங்களில் நடிப்பது என்பதைப் பற்றி முடிவு செய்வாராம்.

Comments