Monday,8th of April 2013
சென்னை::சினிமாவில் ஆர்ப்பாட்டமான காமெடியனாக வலம் வந்தவர் வடிவேலு. ஆனால் அந்த ஆர்ப்பாட்டத்தை அவர் அரசியலிலும் நுழைத்ததால், அடக்கி விட்டார்கள். அதனால் கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா வாசனை இன்றி வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்த வடிவேலு, தற்போதுதான் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். கஜபுஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்ற அந்த படத்தின் வேலைகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில், தனது மூத்த மகளின் திருமணத்தை நடத்துவதற்கான வேலைகளில் கடந்த சில மாதங்களாகவே ஈடுபட்டிருந்தார் வடிவேலு, சினிமா வட்டாரங்களில் உள்ள தனது நட்பு வட்டாரங்களை சந்தித்து நேரடியாகவே திருமண பத்திரிகை கொடுத்து வந்தார். நேற்று மதுரை, விரகனூர் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர் மகளின் திருமணம் நடைபெற்றது. ஆனால், ஒரு சினிமா நடிகரின் வீட்டு திருமணம் என்ற அறிகுறியே இல்லாத அளவுக்கு எந்தவித ஆடம்பரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் திருமணம் நடைபெற்றது. அதோடு, வடிவேலு எதிர்பார்த்த பெரும்பாலான முன்னணி நடிகர்கள் நடிகைகள் கல்யாணத்துக்கு செல்லவில்லையாம். பிரபலமில்லாத சில கலைஞர்கள் மட்டுமே ஆஜராகியிருந்தார்களாம்.

Comments
Post a Comment