அஞ்சலிக்காக காத்திருக்கும் படக்குழுவினர்!!!

Thursday,11th of April 2013
சென்னை::நடிகை அஞ்சலி கடந்த சில நாட்களாக தான் இருக்குமிடத்தை மறைத்துக் கொண்டு , படப்பிடிப்புக்கும் செல்லாமல் ஒரு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அவருடைய சித்தி பாரதி தேவி மீதும், இயக்குனர் களஞ்சியம் மீதும் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்ததும், அதை இருவரும் மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே அஞ்சலி , வெங்கடேஷ் ஜோடியாக நடிக்கும் தெலுங்குப் படம் ஒன்றின் படப்பிடிப்புக்கும் செல்லாமல் தவிர்த்து வருகிறார்.
வெங்கடேஷ் ஜோடியாக அஞ்சலி நடிக்கும் ‘போல் பச்சன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்திற்காக நேற்று முதல் பெங்களூருவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் குறிப்பிட்டபடி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.
 
அப்படத்தின் தயாரிப்பாளருக்கும் அஞ்சலி எந்த போனும் செய்யவில்லை. அஞ்சலி எந்த வெளியூருக்கும் செல்லவில்லை, அவர் சென்னையில்தான் இருக்கிறார் என்ற தகவலும் உலவி வருகிறது.
அஞ்சலியின் இந்த ‘கண்ணாமூச்சி’ விவகாரம் தமிழ், தெலுங்கு திரையுலகில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments