Monday,1st of April 2013
சென்னை::தனுஷ் – ஸ்ருதிஹாசன் நடிக்க, ஐஸ்வர்யா ஆர். தனுஷ் இயக்கிய ‘ 3 ‘வெற்றிப்படத்தைத் தொடர்ந்து வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிட் பட நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் மிக பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கும் படம் ’எதிர்நீச்சல்’.
‘மனம் கொத்திப் பறவை, மெரீனா ‘மற்றும் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா ‘ஆகிய வெற்றிப்படங்களில் நடித்து, முன்னணி நகைச்சுவை கதாநாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இங்கிலீஷ் விங்கிலீஷ்,180 ஆகிய படங்களில் நடித்த பிரியா ஆனந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
அட்டகத்தி படத்தில் கதாநாயகியாக நடித்த நந்திதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
உலகப்புகழ்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறிடி’ பாடல் புகழ் அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
நடிகர் தனுஷ், தாமரை, கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர்.
தான் நடிக்காத, வேறு கதாநாயகன் நடிக்கும் படத்துக்கு தனுஷ் பாடல் எழுதுவது இதுவே முதல்முறை.
அதோடு நடிகை நயன்தாரா உடன் ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார் தனுஷ்.
‘ஆடுகளம், எங்கேயும் எப்போதும், 3 ‘உட்பட பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.வேல்ராஜ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
தேசியவிருது பெற்ற கிஷோர். டி.இ. இப்படத்தின் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
‘பருத்தி வீரன், ஆடுகளம், ஓகே ஓகே’ படங்களின் கலை இயக்குநரான ஜாக்சனிடம் உதவியாளராகப் பணிபுரிந்து துரைராஜ் இப்படத்தின் மூலம் கலை இயக்குநராக அறிமுகமாகிறார்.
பாலுமகேந்திரா, வெற்றிமாறன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார்.
எதிர்நீச்சல் – ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.
Comments
Post a Comment