50-க்கும் அதிகமான எம்.ஜி.ஆர். பாடல்களை மனப்பாடமாக பாடும் வடிவேலு!

Monday,29th of April 2013
சென்னை::50-க்கும் அதிகமான எம்.ஜி.ஆர். பாடல்களை இன்றைக்கும் மனப்பாடமாக பாடுவார் வடிவேலு.பாடலின் இந்த இடத்தில் இருந்து பாடுங்கள் என்றால், அந்த இடத்திலிருந்தே தொடங்குவார்.
 
காரில் போகிற இடங்களில் எல்லாம்
பழைய பாடல்களே அவரைத் தாலாட்டும். சில சமயங்களில் பாட்டை நிறுத்தி விட்டு, மனம் விட்டு பாடி டிரைவரை ரசிக்க விட்டு பார்ப்பார். மதுரை சென்ட்ரல் தியேட்டரில் எம்.ஜி.ஆரின் "எங்கள் வீட்டு பிள்ளை' படத்தை எத்தனை முறை பார்த்திருப்பார் என்று அவருக்கே தெரியாது. காட்சியின் கீழ் காட்சியாக அந்த படத்தின் கதையைச் சொல்லுவதை இப்போதும் விரும்புவார்.
 
முதன் முதலாக வாங்கிய டாட்டா ஸ்கார்ப்பியோ காரை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார். முதல் சம்பளத்தில் வாங்கிய அந்த காரில்தான் வடிவேலின் தாயார் சரோஜினி அம்மாள் இன்றைக்கும் பயணிக்கிறார். ஓய்வு நேரங்களில் எம்.ஜி.ஆர். பாடலை பாடியபடி காரை துடைத்து மகிழ்ச்சியுறுவார்.

Comments