திரிஷாவுக்கு 29 வயது:உறவுக்காரரை மணக்க திரிஷா மறுப்பு!!!

Monday,22nd of April 2013
சென்னை::திரிஷாவுக்கு 29 வயது ஆகிறது. 2002-ல் அவர் நடிக்க வந்தார். 10 வருடத்துக்கும் மேலாக நடித்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு வயதாவதை தொடர்ந்து தாய் உமா கிருஷ்ணன் மாப்பிள்ளை தேடினார்.

பல மாதங்களாக ஜாதகங்களை அலசி உறவுக்கார இளைஞர் ஒருவரை மாப்பிள்ளையாக தேர்வு தெய்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் பரவின.

தற்போது ஜெயம் ரவி ஜோடியாக 'பூலோகம்', ஜீவா ஜோடியாக 'என்றென்றும் புன்னகை' படங்களில் திரிஷா நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழில் தயாராகும் 'ரம்' படத்திலும் நடிக்கிறார். இவற்றின் படப்பிடிப்புகள் விரைவில் முடிய உள்ளன. அதன்பிறகு திரிஷாவுக்கு திருமணம் இருக்கும் என கூறப்பட்டது. இதனால் புதுப்படங்களில் நடிப்பதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாகவும் செய்திகள் வெளியாயின.

ஆனால் திடீரென்று உறவுக்கார இளைஞரை மணக்க திரிஷா மறுத்து விட்டார். இதனால் அவரது தாய் உமா கிருஷ்ணன் அதிர்ச்சியாகியுள்ளார். திருமணம் நின்று போனதையடுத்து 'பிரியம்' பாண்டியன் இயக்கும் புதுப்படமொன்றில் நடிக்க திரிஷா சம்மதித்து உள்ளார். இதில் சுனைனா, ரம்யா நம்பீசன் என மேலும் இரு நாயகிகள் உள்ளனர். இதில் நடிக்க திரிஷாவுக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாகவும், படம் முடியும் வரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று இயக்குனரிடம் உறுதி அளித்துள்ளாராம்.
tamil matrimony_INNER_468x60.gif

 

Comments