சினிமா இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்–பின்னணி பாடகி சைந்தவி திருமணம் வருகிற ஜூன் மாதம் 27–ந் தேதி சென்னையில் நடக்கிறது!!!

Monday,22nd of April 2013
சென்னை::சினிமா இசையமைப்பாளர்
ஜீ.வி.பிரகாஷ்–பின்னணி பாடகி சைந்தவி திருமணம் வருகிற ஜூன் மாதம் 27–ந் தேதி சென்னையில் நடக்கிறது.
 
காதல்
 
‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீ.வி.பிரகாஷ். மதராஸ பட்டினம், ஆடுகளம், பொல்லாதவன், உதயம் என்.எச்.4 உள்பட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவருக்கும், பின்னணி பாடகி சைந்தவிக்கும் பல வருடங்களாக காதல் இருந்து வருகிறது. சைந்தவி ‘பையா’ படத்தில் இடம்பெற்ற ‘அடடா மலைடா’, ‘மயக்கம் என்ன’ படத்தில் இடம்பெற்ற ‘பிறைதேடும்’, ‘தாண்டவம்’ படத்தில் இடம் பெற்ற ‘உயிரின் உயிரே’ ஆகிய பாடல்களை பாடியவர். ஜீ.வி.பிரகாஷ்–சைந்தவி இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு இரண்டு பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தார்கள்.
 
திருமணம்
 
அதன்படி, ஜீ.வி.பிரகாஷ்–சைந்தவி திருமணம் வருகிற ஜூன் மாதம் 27–ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Comments