26ம் தேதி ‘யாருடா மகேஷ்’ ரிலீஸ்!!!

Tuesday,16th of April 2013
சென்னை::மதன் குமார் இயக்கத்தில் கோபி சுந்தர் இசையமைப்பில், சுந்தீப் கிஷன், டிம்பிள், மற்றும் பலர் நடிக்கும் படம் ‘யாருடா மகேஷ்’.
இந்த படத்தின் டிரைலர் வெளியிட்ட உடனே இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
 
ஒரு முழுமையான நகைச்சுவைப் படமான இதில் ஜெகன், ஸ்ரீநாத், லிவிங்ஸ்டன், உமா பத்மநாபன், சுவாமிநாதன், சிங்கமுத்து, நெல்லை சிவா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
 
ஜெயம் ரவி, நீது சந்திரா நடித்து அமீர் இயக்கிய ‘ஆதி பகவன்’ படத்தைத் தயாரித்த அன்பு பிக்சர்ஸ் இந்த படத்தை வெளியிட இருக்கிறார்கள்.
ரசிகர்களிடம் இந்த படத்தை சரியாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இருக்கிறார் அன்பு பிக்சர்ஸ் ஜெ. அன்பழகன்.
இந்த படம் வரும 26ம் தேதி வெளியாக இருக்கிறது.

Comments