இந்தியன் போலீஸ் கதை ‘சிங்கம் 2’!!!

Monday,15th of April 2013
சென்னை::ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘சிங்கம் 2 ’ படம் பரபரப்பாக வளர்ந்து வருகிறது.
சிங்கம் 2’ படத்தைப் பற்றி இயக்குனர் ஹரி கூறியதாவது,
 
தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் அதே கதையின் தொடர்ச்சியாக வருவது இந்தப் படமாகவே இருக்கும். பிரகாஷ்ராஜ் முதல் பாகத்தில் இறந்து விடுவதால் இரண்டாம் பாகத்தில் அவர் இல்லை.
முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகம் பற்றிய அவுட்லைன் மனதில் இருந்தது. ‘வேட்டை தொடரும்’ என்று பார்த்த பின்னர் பலருக்கும் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டது. பார்க்கிறவர்கள் எல்லோரும் அதையே கேட்டார்கள். அதுவே ஊக்கம் தந்தது, இரண்டாம் பாகம் எடுக்க முடிவெடுத்து விட்டேன்.
 
சூர்யா,  அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், நாசர், விவேக், மனோரமா, ராதாரவி, முகேஷ் ரிஷி, விஜயகுமார் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
 தென்னிந்தியாவில் ஆரம்பித்து தென்னாப்பிரிக்காவில் முடியும் கதை. படத்தின் கிளைமாக்ஸ் வெளிநாட்டில்தான் நடக்கிறது. படத்தில் தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா போலீஸ் வருகிறார்கள். இந்தியன் போலீஸ் என்றால் எப்படிப்பட்டது என்பது படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது,” என்கிறார் இயக்குனர் ஹரி.

Comments