18 கதாநாயகிகள் நடிக்கும் படம்!!!

Sunday,28th of April 2013
சென்னை::பாக்யராஜ் நடித்த மௌனகீதங்கள் படத்தில் அவரது மகன் வேடத்தில் சிறுவனாக நடித்தவர் மாஸ்டர் சுரேஷ். ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன்,மனிதன் என பதினைந்து படங்களில் சிறு வயது ரஜினியாக நடித்திருக்கிறார்.
 
கமலஹாசன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு,சிரஞ்சீவி, மிதுன் சக்கரவர்த்தி போன்ற நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் சுமார் 216 படங்களில் சிறுவனாக நடித்தும் புகழ் பெற்றவர். கேரளா அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது இரு முறையும், மத்திய அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது இரு முறையும் பெற்றவர். தெலுங்கில் ஐந்து வெற்றிப் படங்களை இயக்கி உள்ளார்.மாஸ்டர் சுரேஷ்
 
இப்போது சூர்யகிரண் என்ற பெயரில் கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார். இவர் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘கவிதா முதல் கல்பனா வரை’, என்று பெயர் வைத்துள்ளனர். இவருக்கு ஜோடியாக பதினெட்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
திரைப்பட கல்லூரி மாண


வரும், கமலிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவருமான ரவிதேவன். கதை – திரைக்கதை – வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார்.
 
ட்ரீம் வேல்டு சினிமாஸ் சார்பில் தலைவன் பட இயக்குனர்                டி.எஸ். ரமேஷ்செல்வன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்ய, அசோக்மேத்தா படத்தொகுப்பு செய்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளிக்கிறார்.
ஒரு இளைஞனின் வாழ்க்கையில் பதினெட்டு பெண்கள் எப்படியெல்லாம்பயணிக்கிறார்கள், அவர்கள் மூலமாக அவனின் வாழ்க்கையில் எந்த விதமான பாதிப்புகள் உண்டாகிறது என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் கலகலப்பாக சொல்கிறது இந்த படம்.
மே மாதம் முதல் நாள் பாடல் பதிவுடன் தொடங்கவிருக்கும் இந்த படத்திற்கான மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

Comments