18 காமெடி நடிகர்கள் நடிக்கும் கோப்பெருந்தேவி!!!

Saturday,6th of April 2013
சென்னை::சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரிக்கும் படம், ‘கோப்பெருந்தேவி’. ஹ்ருஷிகேச அச்சுதன் சங்கர் இயக்குகிறார். ரமேஷ்குமார் ஒளிப்பதிவு. எஸ்.எம்.பிரசாந்த் இசை. இதில் கோவை சரளா, வி.டி.வி கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், மனோபாலா, சாமிநாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, சாம்ஸ், அனுமோகன், வெங்கல்ராவ், பயில்வான் ரங்கநாதன், அல்வா வாசு உட்பட பதினெட்டு நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மற்றும் ஊர்வசி, தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், இளவரசு உட்பட பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குனர் ஹ்ருஷிகேஷ அச்சுதன் சங்கர் கூறும்போது, ‘‘அடர்ந்த காட்டில் பழைய ஜமீன் மாளிகையில் பிரம்மாண்டமான புதையல் இருக்கிறது. அதை பயங்கரமான பேய் ஒன்று பாதுகாத்து வருகிறது. இது தெரியாமல் புதையலெடுக்கக் கிளம்பும் நகைச்சுவைப் பட்டாளம் பேயிடம் மாட்டிக்கொண்டு என்ன பாடுபட்டார்கள் என்பதை காமெடியாகவும் திரில்லுடனும் சொல்கிறோம். படத்தில் இருபது நிமிட கிராபிக்ஸ் காட்சி இடம்பெறுகிறது. அது மிரட்டுவதாக இருக்கும். மே மாதம் படம் ரிலீஸ் ஆகிறது’’ என்றார்.

Comments