வஸந்தின் புதிய படம் மூன்று பேர் மூன்று காதல் மே 1 வெளியாகிறது!!!

Thursday,18th of April 2013
சென்னை::வஸந்தின் புதிய படம் மூன்று பேர் மூன்று காதல் மே 1 வெளியாகிறது.

அர்ஜுன், சேரன், விமல் என்று மூன்று ஹீரோக்கள். அவர்களுக்கு தலா ஒரு ஜோடி என்று மூன்று ஹீரோயின்கள். பெய‌ரிலேயே கதையை சொன்ன இயக்குனர் வழக்கம் போல இசைக்கு யுவன் ஷங்கர் ராஜாவையே தேர்வு செய்தார். இன்று இசை ரசிகர்களின் ஃபேவரைட் இப்படத்தின் பாடல்கள்தான்.

படத்தின் தொலைக்காட்சி உ‌ரிமையை மிகப்பெ‌ரிய விலைக்கு ஸீ தமிழ் வாங்கியுள்ளது. படத்தைப் பார்த்த சென்சார் வஸந்தை பாராட்டியதோடு சின்ன கட் கூட இல்லாமல் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

விரைவில் தெலுங்கிலும் வெளியாகவிருக்கும் இப்படம் தமிழில் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

Comments