Wednesday,27th of March 2013
சென்னை::1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்த நடிகை அம்பிகா தற்போது ‘நிழல்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆகியுள்ளார்.
நான்கு மொழிகளில் 175க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் அம்பிகா.
சுரேஷ் என்பவருடன் இணைந்து ‘நிழல்’ படத்தை இயக்கியுள்ளார் அம்பிகா.
இப்படம் POV ( Point of View) முறையில் எடுக்கப்பட்டுள்ள படம். அதாவது படத்திற்கென்று தனியாக ஒளிப்பதிவாளர் யாரும் கிடையாது. படத்தில் நடிக்கும் நடிகர்களே ஒளிப்பதிவு செய்யும் முறை இது, இதன் மூலம் படம் பார்ப்பவர்களும் படத்தினூடே பயணிப்பது போன்ற அனுபவம் ஏற்படும்.
கிஷோர், இந்து தம்பி, மற்றும் பல புதுமுகங்கள் நடித்துள்ளார்கள்.
அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.
Comments
Post a Comment