Sunday,31st of March 2013
சென்னை::போடா போடி‘ படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமான சரத்குமார் மகள் வரலட்சுமி தற்போது விஷால் ஜோடியாக ‘மத கஜ ராஜா‘ படத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் வரலட்சுமி, டைரக்டர் சாய் கிஷோர் இயக்கத்தில் அல்லாரி நரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.
பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தும் மாதவன், தற்போது தனது உடற்கட்டை சிக்ஸ்பேக் தோற்றத்துக்கு மாற்ற ஜிம்சென்று கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார்.
சீதம்மா வாகிட்லோ சிறுமலே ச¤ட்டு‘ படத்தில் வெங்கடேஷீடன் ஜோடி போட்ட அஞ்சலி தெலுங்கில் உருவாகும் ‘போல் பச்சான்‘ படத்தில் மீண்டும் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை விஜய் பாஸ்கர் இயக்குகிறார்.
ஹோலி பண்டிகை முன்பெல்லாம் மனக்கசப்பு ஏற்படுத்தியவரை மன்னிக்கும் நாளாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இப்போது இசை, வண்ணப்பொடி தூவல், வெறித்தனமான பார்ட்டியாக மாறிவிட்டதாக கூறுகிறார் பியா.
கரு. பழனியப்பன் இயக்கும் ‘ஜன்னல் ஓரம்Õ படத்தில் பஸ் டிரைவராக நடிக்கிறார் பார்த்திபன். மலையாளத்தில் வெளியான ‘ஆர்டினரி‘ படத்தின் ரீமேக்காக இது உருவாகிறது.
செல்லபிராணிகள் நல சங்கத்தின் தூதராக இருக்கும் த்ரிஷா விரைவில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் அறிமுகமாக உள்ள ஐஸ் கிரீம் நிறுவனம் ஒன்றின் தூதராக உள்ளார்.
சசிகுமார், லட்சுமிமேனன் நடிக்கும் ‘குட்டிப்புலி‘ படத்தின் ஷூட்டிங் முடிந்தது. புதுமுக இயக்குனர் முத்தையா இயக்கும் இப்படம் விரைவில் சென்சாருக்கு திரையிடப்பட உள்ளது.
நிழல் என்ற குறும்படத்தை இயக்குகிறார் அம்பிகா. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் யாரும் கிடையாது. காட்சியில் நடிக்கும் நடிகரே கேமராவையும் கையாள்கிறார்.
* தன் குழந்தைகள் தியா, தேவுடன் விளையாடுவது சூர்யாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களை மொட்டை மாடிக்கு கூட்டி சென்று நிறைய நீதிக்கதைகள் சொல்வாராம்.
* ‘நான் ஈ’ பட ஹீரோ நானி நடித்து தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அலா மொதலைந்தி’ படம் தமிழில் ரீமேக் ஆகிறது. பிரியதர்ஷன் உதவியாளர் ரவி தியாகராஜன் இயக்கும் இப்படத்தில் நடிக்கிறார் ‘கடல்’ பட ஹீரோ கவுதம் கார்த்திக்.
* லட்சுமிராய் மலையாளத்தில் நடிக்கும் ‘மிரர்’ (கண்ணாடி) என்ற படம் பெயருக்கு ஏற்றபடி இரண்டாக உடைந்துவிட்டது. கதை ரொம்ப நீளமாக இருப்பதால் இரண்டு படமாக இயக்க உள்ளனர். ‘100 டிகிரி செல்சியஸ்’ என்று பெயரையும் மாற்றிவிட்டனர். பாமா, சுவேதா மேனன், நாயர், மேக்னா ராஜ் நடிக்கின்றனர்.
* நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய படம் இயக்கி நடிக்கிறார் அர்ஜுன். ரூ.20 கோடி செலவில் உருவாகும் இப்படத்துக்கு பெயரிடவில்லை. ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘ஜென்டில்மேன்’ படம் போல இதுவும் கல்வி சப்ஜெக்டாம்.
* சமீபத்தில் தான் நடித்த படத்தின் பாடல் கேசட் விழாவுக்கு வராததால் நடிகர் ஆதி மீது புகார் எழுந்தது. ‘புதுச்சேரியில் வேறொரு படத்தில் 150 துணை நடிகர்களுடன் நடித்ததால்தான் வர முடியவில்லை’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
Comments
Post a Comment