பிரபல நடிகர்களின் ரசிகர்கள் மோதல் கதை ‘சுண்டாட்டம்!!!

Friday,1st of March 2013
சென்னை::பிரபல நடிகர்களின் ரசிகர்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் பற்றிய கதையாக ‘சுண்டாட்டம்’ என்ற படம் உருவாகி இருக்கிறது.

இதுபற்றி இயக்குனர் பிரம்மா ஜி.தேவ் கூறியதாவது: 1990களில் ரஜினி, கமல் படங்களுக்குத்தான் பலத்த போட்டி. இரண்டு மன்ற ரசிகர்களும் தீவிரமாக இருப்பார்கள். இரு ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கேரம் விளையாட்டில் ரொம்பவும் ஆர்வமாக இருப்பார்கள். அதுதான் வாழ்க்கை என்பதுபோல் விளையாடுவார்கள். இதில் ஏற்படும் மோதல் விபரீதத்தில் முடிகிறது. அதன்பிறகு நடப்பது என்ன என்பது கதை.

இத்துடன் உண்மை காதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. நடந்தவைகள் அனைத்தையும் முழுமையாக காட்ட முடியாது என்பதால் 60 சதவீதம் உண்மை கதையும் 40 சதவீதம் கற்பனையும் கலந்து ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டது. இர்பான் ஹீரோ. மற்றொரு ஹீரோ மது. சூதாட்ட கிளப் நடத்தும் தாதாவாக நரேன் நடிக்கிறார். அருந்ததி ஹீரோயின். சிந்தாதரிப்பேட்டையில் கேரம் கிளப் நடத்தும் முனுசாமி என்பவரிடம் இர்பான், மது பயிற்சி பெற்றனர். அந்த கிளப்பில் நடிகர்கள் என்று கூறிக்கொள்ளாமல் சக மாணவர்களைப் போல் இருவரும் பயிற்சி பெற்றனர். வரும் 8ம் தேதி படம் ரிலீஸ்.

Comments