Saturday,23rd of March 2013
மும்பை::குத்து பாடல் ஆடுவதிலோ, படத்தில் காட்டுவதிலோ ஒரு தப்பும் கிடையாது, அதை யாராலும் தடுக்க முடியாது என்றார் கவர்ச்சி நடிகை யானா குப்தா.
மன்மதன் படத்தில் சிம்புவுடன் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடியவர் பாலிவுட் நடிகை யானா குப்தா. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். படங்களில் குத்து பாடல் இடம்பெற்றால் அப்படத்துக்கு ‘ஏ‘ சான்றிதழ் வழங்கப்படும் என்று தணிக்கை குழு அறிவித்துள்ளது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுபற்றி யானா குப்தா கூறும்போது,‘ரசிகர்கள் ஐட்டம் பாடல் எனப்படும் குத்துப்பாடலை விரும்பி பார்க்கிறார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் படத்தில் குத்துப்பாடல் இடம்பெறுவதில் தவறில்லை.
மேலும் இந்த காலகட்டத்தில் படங்களுக்கு இப்போது குத்துப்பாடல் அவசியமாக இருக்கிறது. என்றைக்கு குத்து பாடல்கள் பார்த்தது போதும் என்று ரசிகர்கள் கூறுகிறார்களோ அப்போது யாரும் அதுபோல் பாடல் எடுக்கப்போவதில்லை. ஐட்டம் பாடலுக்கு ஆடியே தீருவேன் என்று எந்த நடிகையும் பிடிவாதம் பிடிப்பதில்லை. தங்களுக்கு பிடித்தால் மட்டுமே அதுபோன்ற பாடலுக்கு ஆடுவார்கள். சமீபத்தில் பிரபல பாலிவுட் பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் குத்து பாடலில் என்னை ஆட கேட்டார்கள். அதை ஏற்கவில்லை. எதையும் விரும்பி செய்யும்போது அநாவசியமான பயத்திலிருந்து பெண்கள் வெளிவர முடியும். நடிப்பு நடனம் தவிர ஸ்குபா டைவிங், ஹெலிகாப்டர் பயணம், பஞ்சி ஜம்பிங் எனப்படும் காலை கட்டிக்கொண்டு உயரத்திலிருந்து குதிக்கும் விளையாட்டு போன்றவற்றை நான் செய்கிறேன்‘ என்றார்.
Comments
Post a Comment