Wednesday,27th of March 2013
சென்னை::கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடித்து பிரம்மாண்டமான தயாரிப்பாக வெளி வந்த ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படம் வசூல் ரீதியாக தமிழில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழில் வெளியான சில வாரங்கள் கழித்து தெலுங்கில் சென்ற வாரம் ‘பேட் பாய்’ என்ற பெயரில் இந்த படத்தை வெளியிட்டார்கள். அங்கும் படத்தின் ரிசல்ட் ‘பேட்’ ஆக அமைந்து விட்டதாம்.
பத்திரிகைகளும், இணையதளங்களும் இந்த படத்தைப் பற்றி மோசமாக விமர்சனம் செய்துள்ளன.
தமிழில் ‘பருத்திவீரன்’ படம் மூலம் அறிமுகமான கார்த்திக்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. ஆனால் , அவர் கடந்த சில படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் படங்களின் கதைகளைக் கண்டு பலரும் ஆச்சரியப்பட்டே வருகின்றனர்.
‘சகுனி, அலெக்ஸ் பாண்டியன்’ படங்கள் கார்த்தியின் இரு பட உலக மார்க்கெட்டை கொஞ்சம் அசைத்துப் பார்த்து விட்டது.
இதன் காரணமாகத்தான் இப்போது, ‘பிரியாணி’யா, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ வா, எது முதலில் என குழப்பமடையச் செய்துள்ளதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொறுமையா யோசிச்சி திரும்பவும் ‘கலக்குங்க கார்த்தி’.
Comments
Post a Comment