Saturday,16th of March 2013
சென்னை::சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தால் என்ன தப்பு’ என்று கேட்கிறார் வர்ஷா அஸ்வதி. ‘பேராண்மை’, ‘நீர்ப்பறவை’ படங்களில் நடித்த வர்ஷா அஸ்வதி கூறியதாவது: ‘பேராண்மை’ படத்தில் 5 ஹீரோயின்களில் ஒருத்தியாக நடித்தேன். ‘நீர்ப்பறவை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நந்திதாதாஸுடன் நடித்தேன். அடுத்து சத்யராஜ் நடிக்கும் ‘நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ’ (அமைதிப்படை 2) மற்றும் ‘பனிவிழும் மலர் வனம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடிக்கிறேன்.
சீனியர் நடிகருடன் நடிப்பது ஏன் என்கிறார்கள்.
சீனியர் நடிகர்களுடன் நடித்தால் என்ன தப்பு. சத்யராஜுடன் நடிக்கும்போது நடிப்பு பற்றி நிறைய கற்றுக்கொள்கிறேன். அதுபோல் ‘என்றென்றும் புன்னகை’ யில் த்ரிஷாவுடன் நடிக்கும்போது நிறைய கற்றேன். ‘பனிவிழும் மலர் வனம்’ படத்தில் ஆக்ஷன்காட்சியில் நடித்திருக்கிறேன். உதட்டோடு உதடு முத்தம் தரும் காட்சியில் நடிப்பதற்கு விருப்பம் இல்லை. இதுபோன்ற காட்சியில் மற்ற நடிகைகள் நடிப்பதுபற்றி கருத்து சொல்ல முடியாது. கவர்ச்சி இப்போது கமர்ஷியல் ரீதியாக தேவைப்படுகிறது. கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்ல மாட்டேன் என்றார் அஸ்வதி.
Comments
Post a Comment