Sunday,17th of March 2013
சென்னை::தனது வாயினாலேயே பல ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, அதே வாயினாலேயே சில ஆண்டுகள் சினிமாவை விட்டே ஒதுங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டு சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க இருந்த வடிவேலு, தற்போது தன்னாலேயே அதற்கும் ஆப்பு வைத்துக்கொண்டாராம்.
வடிவேலுவை உச்சிக்கு உயர்த்திய படம் தான் 'இம்சை அரசன் 23அம் புலிகேசி' இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழை இருப்பதாக வடிவேலு பேட்டியின் போது கூறினார். இப்படத்தை சிம்புதேவன் இயக்கப் போவதாக இருந்தது. இதற்கிடையில், இப்படத்தின் கதையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற கதாபாத்திரத்தை நுழைக்க வேண்டும் என்று வடிவேலு கேட்டுக்கொண்டாராம். மேலும் சிம்பு தேவன் எழுதிய வசனங்களிலும் கரேக்ஷன் செய்யத்தொடங்கினாராம்.
வடிவேலுவுக்கு எடுத்துக்கூறிய சிம்பு தேவன், ஒரு கட்டத்தில் இந்த படமே வேண்டாம் என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டாராம். தற்போது மீண்டும் வீட்டில் அமர்ந்து யோசிக்கத் தொடங்கி விட்டாராம் வடிவேல
Comments
Post a Comment