Tuesday,5th of March 2013
சென்னை::வஸந்த் முதல் காப்பி அடிப்படையில் தயாரித்த மூன்று பேர் மூன்று காதல் படத்தின் விநியோக உரிமையை ஸீ தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
அர்ஜுன், சேரன், விமல் நடித்திருக்கும் காதல் படமான மூன்று பேர் மூன்று காதலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களால் விரும்பி வரவேற்கப்பட்டது. தற்போது அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. மார்ச் இரண்டாவது வாரத்தில் அல்லது மூன்றாவது வார தொடக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி தயாராகிவிடும்.
முதல் காப்பி தயாராவதற்கு முன்பே விநியோக உரிமையை ஸீ தொலைக்காட்சி வாங்கியுள்ளது. இப்படம் தெலுங்கிலும் வெளிவருவது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment