Tuesday,5th of March 2013
சென்னை::ஆபாச கதையில் நடிக்க மறுத்தேன் என்றார் ஹன்சிகா. இது பற்றி அவர் கூறியதாவது: இந்தியில் ஹிட்டான டெல்லி பெல்லி படத்தை தமிழில் சேட்டை என்ற பெயரில் இயக்கப்போவதாக டைரக்டர் கண்ணன் கூறி என்னிடம் கால்ஷீட் கேட்டார். இப்படியொரு படத்தில் என்னை நடிக்க வைத்து பிளாஸ்டிக் கவரால் என் முகத்தை மூடிக்கொண்டு நடமாடச் செய்யப்போகிறீர்களா? என்று கேட்டேன். அந்தளவுக்கு அப்படத்தில் நடிக்க தயக்கம் காட்டினேன். இந்தியில் உருவான படத்தில் ஆபாச வசனங்கள், காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. அப்படியொரு படத்தை தமிழ் ரசிகர்கள் எப்படி ஏற்பார்கள் என்று நினைத்தேன். அதனால் நடிக்க மறுத¢தேன்.
பிறகுதான் தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ப ஸ்கிரிப்ட் மாற்றப்பட்டிருக்கிறது என்று இயக்குனர் விளக்கினார். முழுபடத்திலும் நடித்தபிறகு திருப்தி ஏற்பட்டிருக்கிறது. ஷூட்டிங்கின்போது நடிக்க மறுப்பதற்கான காட்சி எதுவும் எனக்கு தரப்படவில்லை. இப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்கும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. ஒரிஜினல் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு கிளைமாக்ஸ் காட்சியை தவிர மற்றபடி வேலை அதிகம் கிடையாது. தமிழில் அந்த கதா பாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் பட குழுவினரும் நல்ல முறையில் ஒத்துழைத்தார்கள். ஆர்யா, சந்தானம், அஞ்சலி என்று நல்ல கலைஞர்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
Comments
Post a Comment