Tuesday,5th of March 2013
சென்னை::காதலன் யார் என்பதை சொல்லமாட்டேன் என சஸ்பென்ஸ் வைக்கிறார் பாவனா. இது பற்றி அவர் கூறியதாவது: நான் நடிகையானதே வித்தியாசமான அனுபவம். எனக்கு கருப்பு மேக்அப் போட்டு டெஸ்ட் வைத்தார் இயக்குனர். அவருக்கு பிடித்துவிட்டது. நடிக்க வைக்க ஒப்புக்கொண்டார். சினிமாவுக்கு வந்து 11 வருடம் ஆகிவிட்டது. தமிழ், தெலுங்கு தவிர கன்னட படங்களில் நடித்து வருகிறேன். கன்னடத்தில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கிறேன். ஆனால் பெரிய ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்று நான் பிடிவாதம் பிடிப்பதில்லை. எல்லாமே தேடி வந்த வாய்ப்புதான். இப்போது ‘தொப்பி வாலா‘ என்ற படத்தில் உபேந்திரா ஜோடியாக நடிக்கிறேன்.
கருப்பு பணத்தை பற்றிய கதை. போலீஸ் வேடம் ஏற்கிறேன். இதற்குமேல் இதுபற்றி சொல்ல முடியாது. என்னுடன் நடிக்க வந்த ஹீரோயின்கள் பலர் திருமணம் ஆகி செட்டிலாகிவிட்டதால் எனக்கு திருமணம் எப்போது என்கிறார்கள். அது என்னவோ நிஜம்தான். என்னையும் திருமணம் செய்துகொள்ள குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் அதற்கு நான் காலநேரம் வகுக்கவில்லை. எப்போது நடக்கும் என்பதையும் சொல்ல முடியாது. திருமணம் முடிந்தாலும் நடிகையாகவே இருக்க ஆசைப்படுகிறேன். ‘யாரையாவது காதலிக்கிறீர்களா?‘ என்கிறார்கள். அதுபற்றி இப்போது சொல்லமாட்டேன். இவ்வாறு சிரித்தபடி பதில் அளித்துவிட்டு எஸ்ஸானார் பாவனா.
Comments
Post a Comment