பட்டத்தை தேடி நாம் போகக் கூடாது!!!

Sunday,31st of March 2013
சென்னை::விஜய்-விஜய் கூட்டணியில் படுவேகமாக உருவாகிக்கொண்டிருக்கும் படம் ‘தலைவா’. விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்தின் மிகப்பெரிய வெற்றியைத்தொடர்ந்து, தலைவா படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் ஒரு வாரப்பத்திரைக்கு அளித்த பேட்டியில் இயக்குனர் விஜய் “ மதராசபட்டினம் படத்தைப்பார்த்த விஜய், ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாமே’ எனக்கூறியிருந்தார். தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் விஜய்யின் கால்ஷீட்டுடன் வர விஜய்யிடம் தலைவா படத்தின் கதையைக் கூறினேன்.

தலைவன்கிற பட்டத்த நாம தேடிப்போகக் கூடாது. அது நம்மள தேடி வரணும்’ என்கிற ஒன் லைன் ஸ்டோரியுடன் துவங்கி முழுக்கதையையும் கூறினேன். கதையை கேட்டதும் ஒக்கே சொன்னார் விஜய். ஆனாலும் துப்பாக்கி படத்தின் வெற்றியால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதை உணர்ந்து நல்ல ஸ்ட்ராங்கான திரைக்கதையை பிடிச்சிருக்கோம்.

தலைவா’ படத்தில் சீனுக்கு சீன் ஆர்.டி.எக்ஸ் தான். ஒவ்வொரு தலைவனுக்கும் ஒவ்வொரு ஃபிளாஷ்பேக் இருக்கும். அப்படி தலைவனான ஒருத்தனோட ஃபிளாஷ்பேக் கதை தான் தலைவா படத்தின் கதை” என்று கூறியுள்ளார்.  

Comments