இந்த வாரம் ‘ரிலீஸ்’ வாரம்…!!!

Wednesday,27th of March 2013
சென்னை::கோடை விடுமுறை விரைவில் முழுமையாக வர உள்ள நிலையில் இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 29ம் தேதி 5 படங்கள் வெளியாக உள்ளன.

கேடி பில்லா கில்லாடி ரங்கா , சென்னையில் ஒரு நாள், அழகன் அழகி , கீரிப்புள்ள , மாமன் மச்சான் ஆகிய படங்கள்தான் அந்த ஐந்த படங்கள்.

‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவ கார்த்திகேயன், ரெஜினா, பிந்து மாதவி நடிக்கும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் ஒரு நகைச்சுவைப் படமாக அமைந்துள்ளது.

‘சென்னையில் ஒரு நாள்’ திரைப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘டிராஃபிக்’ படத்தின் ரீமேக் .

‘அழகன் அழகி’ படத்தில் பவர்ஸ்டாரின் டெரர் லவ் ஆந்தம் மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் அதன் இயக்குனர்.

இந்த படங்களைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம், சேட்டை, கௌரவம் போன்ற
பல படங்கள் வெளியீட்டுக்கு அணி வகுத்து நிற்கின்றன…

Comments