குத்தாட்டத்துக்கு தயாராகும் சோனியா அகர்வால்!!!

Saturday,2nd of March 2013
சென்னை::டைரக்டர் செல்வராகவனின் மாஜி மனைவியான நடிகை சோனியா அகர்வால், ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். ஆனால் அதையடுத்து பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிட்டவில்லை. இந்தநிலையில்தான், பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் நாயகியாக கமிட்டானார். மடிசார் கட்டும் மாமி வேடம் என்பதால், மாமிகளின் பாஷைகளை கற்றுக்கொண்டு தன்னை தயார் படுத்தினார் சோனியா. அதோடு, விரிந்து கிடந்த தனது இடுப்பு சதைப்பகுதியையும் சில மாதங்களாக ஜிம்முக்கு சென்று கடும் உடற்பயிற்சி செய்து கரைத்தார் நடிகை. இப்போது ஓரளவு உடல் சதை கரைந்து ட்ரிம்மாகி விட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு அவரை பார்த்தவர்களே இப்போது பார்த்து அசந்து போகிறார்கள். அந்த அளவுக்கு க்யூட்டாகி விட்டார் சோனியா. ஆனால் முன்பு கேரக்டர் ரோல்களுக்கு அவரை கமிட் பண்ணியவர்கள் இப்போதோ, அவர்தான் மீண்டும கதாநாயகியாக நடிக்கப்போகிறாரே இனிமேல் எப்படி சின்ன வேடங்களில் நடிப்பார் என்று சோனியாவை கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டனர். இந்த நிலையில், பாலக்காட்டு மாதவன் படப்பிடிப்பும் நடைபெறாமல் இருப்பதால், கேமரா முன்பே செல்ல வழியில்லாமல் மீண்டும் வீட்டு முகப்பு வளையத்தையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருக்கிறார் நடிகை.

இந்த சூழ்நிலையில், அவரைப்பார்க்கும் சினிமா நண்பர்கள், மார்க்கெட் இல்லாத நடிகருடன், நடிக்க வேண்டும் என்பதற்காக மாதக்கணக்கில் பயிற்சி எடுத்து இப்போது எந்த புண்ணியமும் இல்லாமல் போய் விட்டதே என்று சோனியாவை டென்சன் பண்ணும் விதத்தில் பேசுகிறார்களாம். ஆனால் அவரோ, இந்த படம் இல்லையென்றாலும் எனது அடுத்த ரவுண்டு ஆர்ப்பாட்டமாக இருக்கும். அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கப்போகிறேன் என்று திடீரென்று தில்லாக பேசுகிறாராம். அப்படி என்னதான் அடுத்த கட்ட முயற்சி எடுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டவர்களிடம், கதாநாயகி வேடத்துக்காக ஒன்றும் நான் தவம் கிடக்கவில்லை. அதிரடி குத்தாட்ட நடிகையாகவே இந்த உடல் மாற்றம். அதற்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருக்கிறேன். அதனால் கூடிய சீக்கிரமே தென்னிந்தியா தொடங்கி இந்தி சினிமா வரை எனது குத்தாட்ட எல்லையை விரிவுபடுத்துவேன் என்று சொல்லி தொடை தட்டுகிறாராம் சோனியா அகர்வால்

Comments