Friday,22nd of March 2013
சென்னை::நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிவுக்குப் பிறகு நயன் தாரா, ஆயாவுடன் காதல் கொண்டிருப்பதாக் கிசுகிசுக்கள் அவ்வபோது வெளியாகிறது. இதை ஆர்யாவும், நயன் தாராவும் மறுத்தாலும், அவர்கள் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்குப் பிறகு வலை, ராஜா ராணி உள்ளிட்டப் படங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில், நயன் தாராவுக்கு தனது வீட்டில் ஆர்யா பிரியாணி விருந்து வைத்திருக்கிறார். நயன் தாராவுக்க காதல் எந்த அளவுக்குப் பிடிக்குமோ அதை விட மூன்று மடங்கு பிரியாணியைப் பிடிக்குமாம். இந்த பிரியாணி விருந்து கூட இவர்களுடைய காதல் கிசுகிசுவை பரப்பியது.
இந்த நிலையில், பிரியாணி விருந்தை நயன் தாராவுக்கு மட்டும் வைக்கவில்லை. எனது அம்மா ருசியான பிரியாணி சமைப்பார். அதை சாப்பிட்டு விட்டு சிலர் வெளியே சொல்கிறார்கள். அதனால் பலர் பிரியாணி சாப்பிட ஆர்வமாக இருப்பதை நான் அறிந்தேன். அதனால் தான் இந்த பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். இது நயன் தாராவுக்கு மட்டும் அல்ல, இதில் பல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள் என்று பிரியாணி விருந்துக்கு ஆர்யா விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது ஆர்யா திருமணத்திற்கு தயராகிவிட்டாராம். அவருடைய குடும்பத்தார் அவருக்கு பரபரப்பாக பெண் தேடிக்கொண்டிருக்கிறார்களாம். பொருத்தமான பெண் கிடைத்தவுடன் திருமணம் தானாம்.
Comments
Post a Comment