இந்தியில் ரீமேக் ஆகிறது ஒன்பதுல குரு!!!

Friday,15th of March 2013
சென்னை::ஒன்பதுல குரு படத்தின் இயக்குனர் பி.டி.செல்வகுமார் கூறியது: ப¤ஆர்ஓவாக இருந்த நான், இயக்குனர் ஆகியிருக்கிறேன். இதற்கு முன் எந்த இயக்குனரிடமும் பணியாற்றவில்லை. முதல் படமே ஜாலியான காமெடி படமாக தர முடிவு செய்தேன். அதனால்தான் இந்த கதையை எழுதினேன். ஒருவரை சிரிக்க வைத்தால் அதைவிட பெரிய சேவை எதுவும் இல்லை என சார்லி சாப்ளின் கூறியிருக்கிறார். அதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன். 300 தியேட்டர்களில் படம் ரிலீசானது. குடும்பத்துடன் மக்கள் படம் பார்க்கிறார்கள். காமெடி காட்சிகளை வெகுவாக ரசிக்கிறார்கள்.

படம் ரிலீசான முதல் நான்கு நாட்களில் ரூ.4 கோடி வசூல் செய்துள்ளது. கல்லூரி காலத்திலிருந்தே ஹியூமர் எனக்கு பிடித்த விஷயம். அதையே முக்கியமாகக் கொண்டு படம் தர முடிவு செய்தேன். அதற்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து இதேபோல் காமெடி படங்களை இயக்குவேன். அடுத்த பட வேலைகள் விரைவில் தொடங்க உள்ளேன். நான் தயாரித்த பந்தா பரமசிவம் படம், இந்தியில் ஹவுஸ்புல் 2 ஆக வெளியாகி ரூ.100 கோடி சம்பாதித்தது. இப்போது ஒன்பதுல குரு படம் பார்த்த பாலிவுட்டின் முக்தா ஆர்ட்ஸ் பட நிறுவனம் இதை இந்தியில் தயாரிக்கும் உரிமையை பெற்றுள்ளது. விவேக் ஓபராய் நடிக்கிறார்.

Comments