மாப்பிள்ளை முடிவானது: அனுஷ்காவுக்கு திருமணம்?

Sunday,3rd of March 2013
சென்னை::அருந்ததி படம் மூலம் தமிழில் பிரபலமானவர் அனுஷ்கா. விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம், விக்ரமுடன் தாண்டவம், தெய்வத் திருமகள், கார்த்தியுடன் அலெக்ஸ்பாண்டியன், படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

தற்போது இரண்டாம் உலகம், சிங்கம்-2 படங்களில் நடித்து வருகிறார். அனுஷ்காவுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாப்பிள்ளை பார்த்து விட்டார்களாம். ஆனால் இந்த விஷயங்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

மணமகன் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் என்று செய்தி பரவிய உள்ளது. கைவசம் உள்ள படங்களை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளார்.

Comments