Thursday,7th of March 2013
சென்னை::மும்பை::அசின் தமிழ் சினிமாவை மறந்தாலும், அவரை தமிழர்கள் மறக்க மாட்டார்கள் போலிருக்கிறது. அதனால் தான் அவரைப் பற்றிய கிசுகிசுக்களை அவ்வப்போது வெளியிட்டு அவர் இல்லாத குறையை போக்கி கொள்கிறார்கள். அப்படி சமீபத்தில் அசினைப் பற்றி வெளியான கிசுகிசு தான், அசினுக்கும், அமெரிக்க இளைஞர் ஒருவருக்கும் இடையே உள்ள காதலும், அவர்களுடைய திருமணமும்.
இந்தி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தென்னிந்திய சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு மும்பையில் குடிபோயிருக்கும் அசினிடம் தற்போது பல இயக்குநர்கள் கதை சொல்ல முயற்சித்து வருகிறார்களாம். ஆனால், அசினோ இதுவரை எந்த படத்தை ஏற்றுக்கொள்ளாமல், அடிக்கடி அமெரிக்கா சென்று வருகிறாராம். இதை வைத்துதான் உருவானது அசினின் அமெரிக்க காதல்.
எப்போதும் போல இந்த கிசுகிசுக்கும் தனது விளக்கத்தை கூறியுள்ள அசின், இந்த முறை தனது உதவியாளர் மூலம் ஒரு விளக்கத்தை தெரிவித்துள்ளார். அதில், "அசினுக்கு அமெரிக்க காதலர் இருப்பதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்பதையும் மறுக்கிறோம். அசினின் முழுகவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. அசினுக்கு இப்போது திருமணம் இல்லை." என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment