வெங்கட் பிரபு டயட், என்ற டேக் லைனோடு தயாராகிக் கொண்டிருந்த பிரியாணி படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள்!!!

Friday,1st of March 2013
சென்னை::வெங்கட் பிரபு டயட், என்ற டேக் லைனோடு தயாராகிக் கொண்டிருந்த பிரியாணி படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

ஸ்டுடியோ க்ரீன் என்ற முன்னணி தயாரிப்பு நிறுவனம், முன்னணி ஹீரோ கார்த்தி, நம்பர் ஒன் ஹீரோயின் ஹன்சிகா, மங்காத்தா தந்த இயக்குநர் என எல்லாம் இருந்தும்.... ஏன் ஏன்? என்று கோடம்பாக்கமே கேட்கும் அளவுக்கு இந்த விவகாரம் பரபரப்பாகியுள்ளது.

காரணம்... இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் படத்தின் ஹீரோ கார்த்திக்கும் இடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடு என்கிறார்கள்.

வெங்கட் பிரபு அன்ட் கோ, தங்களுக்கே உரிய விளையாட்டுத்தனத்துடன் படத்தை இழு இழு என இழுத்துக் கொண்டிருப்பது தயாரிப்புத் தரப்பையும், முக்கியமாக பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் ஹீரோவையும் கோபப்படுத்திவிட்டதாம். கார்த்தியின் கால்ஷீட்டை ஏகத்துக்கும் வீணடித்துவிட்டாராம் வெங்கட்பிரபு.

எடுத்த வரைக்கும் போதும்... நிறுத்துங்க என்று தயாரிப்புத் தரப்பு ஒரு பக்கம் சொல்ல, மறுபக்கம் ராஜேஷ் இயக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்குப் போய்விட்டாராம் கார்த்தி.

பிரச்சினை முடிந்து பிரியாண கமகமக்கத் தொடங்கியது என்ற நல்ல சேதி வரட்டும் விரைவில்!

Comments