அஜீத்துக்கு ஜோடி சேர காத்திருக்கிறேன் : நீது சந்திரா பேட்டி!!!

Thursday,7th of March 2013
சென்னை::அஜீத்துக்கு ஜோடி சேர தயாராக இருப்பதாக கூறினார் நீது சந்திரா. ‘ஆதிபகவன் பட ஹீரோயின் நீது சந்திரா ஏற்கனவே மாதவன் ஜோடியாக ‘யாவரும் நலம்‘ படத்தில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு அஜீத்துடன் ‘மங்காத்தா‘ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவரால் ஏற்க முடியவில்லையாம். ஆதி பகவன் படத்தின் கதாபாத்திரத்தில் ஒன்றி நடிக்க வேண்டி இருந்ததால் அஜீத் பட வாய்ப்பை இழந்தாராம். இந்த நிலையில் அவர் அஜீத்துடன் நடிக்கும் ஆசையை வெளியிட்டிருக்கிறார்.

இது பற்றி நீது கூறும்போது, ‘தமிழ் ரசிகர்கள்தான் உண்மையான ரசிகர்கள். ரஜினி, கமல், அஜீத், சூர்யா, விஜய் போன்றவர்களை ரசிகர்கள் நேசிக்கிறார்கள். அதேபோல் அவர்களும் நேசத்தை வெளிப்படுத்துகின்றனர். இன்றைக்கு ஆதி பகவன் படம் மூலம் என் மீதும், ஜெயம் ரவி மீதும் நேசம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களை நானும் நேசிக்கிறேன். இந்த எண்ணம் தவறு என்று யாரும் நினைக்க மாட்டார்கள். அஜீத்துடன் ஜோடியாக நடிக்க காத்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ அஜீத். அவருடன் விரைவில் ஜோடியாக நடிப்பேன் என்றார்.

Comments