சென்னை::நடிகைகள் பிரியாமணி, அனுஷ்கா இருவரும் தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளனர். தெலுங்கிலும் முன்னணி நடிகைகளாக உள்ளனர். இருவரும் ஆடை குறைத்து ஆபாசமாக நடிப்பதாக ஆந்திராவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் அனுஷ்கா, பிரியாமணி நடித்த இரண்டு தெலுங்கு படங்கள் ரிலீசாயின. இப்படங்களில் இருவரும் முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு கூடுதல் கவர்ச்சி காட்டி இருந்தனர். நீச்சல் உடையிலும் சூடேற்றி இருந்தார்கள். இதனால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் தியேட்டரில் திரண்டு படங்களை பார்த்தார்கள்.
ஆந்திராவில் உள்ள சமூக ஆர்வலர் சுபுத்தா கவர்ச்சியாக நடித்த அனுக்ஷாவுக்கும், பிரியாமணிக்கும் கண்டனம் தெரிவித்தார். மல்காஜ் கிரி கோர்ட்டிலும் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, அனுஷ்காவும், பிரியாமணியும் படங்களில் கவர்ச்சியாக நடிக்கின்றனர். இதனால் இளைஞர்கள் கெட்டுப்போவார்கள். அது அவர்களை தவறான பாதைக்கும் வழிநடத்தும். அத்துடன் பெண்களை தறவான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். எனவேதான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார்.
இதனால், அனுஷ்கா, பிரியாமணி இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அவர்கள் நடித்து வரும் படங்களிலும் ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியாக நடித்து வருகிறார்கள். இதனாலும் மேலும் சிக்கல் ஏற்படாமல் என்று தவிக்கின்றனர்.
Comments
Post a Comment