Thursday,28th of March 2013
சென்னை::ஷங்கரின் ஐ படம் சயின்ஸ் பிக்சனா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஷங்கர் ஒவ்வொருமுறை படம் இயக்கும் போதும், இதுதான் கதை என்று இரண்டு டஜன் கதைகளாவது மீடியாவில் புழங்கும். சில கதைகள் அவர் படத்தின் கதையைவிட சுவாரஸியமாக இருப்பதும் நடந்திருக்கிறது. ஐ படத்தைப் பொறுத்தவரை சில கதைகள் கோடம்பாக்கத்தை வலம் வருகிறது
நோஞ்சானாக இருக்கும் விக்ரம் காதலி சொன்னாள் என்பதற்காக உடம்பை தேற்றி ஒலிம்பிக்கில் மெடல் வாங்குகிறார் என்பது ஒரு கதை. தற்போது இன்னொரு கதையும் உலவுகிறது. அது, இந்தப் படம் சயின்ஸ் பிக்சனாக இருக்கலாம் என்பது.
திடீரென இப்படியொரு கேள்வி எழுவதற்கு என்ன காரணம்?
ஐ படத்தில் பீட்டர் ஜாக்ஸனின் வீட்டா ஸ்டுடியோவும் பணியாற்றுகிறது. சிஜி பணியில் இவர்கள் பங்கெடுக்கவில்லை, மாறாக மேக்கப்புக்காக இவர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐ படத்தின் ஆன் லொகேஷன் படங்களில் வீட்டா ஸ்டுடியோவின் மேக்கப் கலைஞர் மேக்கப் போடும் படம் இடம்பெற்றிருந்தது. அதில் இடம்பெற்றிருக்கும் கை கிங்காங்கின் கையை போலிருக்கிறது. இதை வைத்து ஐ சயின்ஸ் பிக்சனாக இருக்குமோ எந்த சந்தேகம் எழுந்துள்ளது.
விக்ரம், எமி ஜாக்ஸன் நடிக்கும் இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
Comments
Post a Comment