சிலோன் கதை எல்டிடிஈ சம்பந்தப்பட்டதில்ல!!!

Wednesday,6th of March 2013
சென்னை::சந்தோஷ் சிவன் பிரச்சனைகளை தேடிப் போய் படமாக்குகிறவர். அப்படி எடுத்தால்தான் சட்டென்று சர்வதேச அளவில் படத்தை கொண்டு செல்ல முடியும் அல்லது கொண்டு செல்வது எளிதல்ல.

ஏற்கனவே டெரரிஸ்ட் படத்தின் மூலம் போராளிகளை படமாக்கியவரின் புதிய படம் சிலோன். ஏ.எம்.ஆர்.ரமேஷ் மாதிரி படமெடுப்பதற்கு பத்து மாதங்களுக்கு முன்பே ஸ்பீக்கர் வைத்து முழக்காமல் முக்கால்வாசி படத்தை சைலண்டாக முடித்துவிட்டார் சந்தோஷ் சிவன். இப்படம் எல்டிடிஈ யை பற்றியது என்றொரு தகவல் உலவுகிறது. கரண்டை கையில் பிடித்தால் என்னாகும் என்பது தெரிந்ததால் அந்தச் செய்தியை உடனடியாக மறுத்தார் சந்தோஷ் சிவன்.

தற்போதைய தகவல் போராளிகள் எவரையும் படத்தில் காண்பிக்கவில்லையாம். மூன்று சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் போர் புயலாட்டம் ஆடியதன் தடயங்களைதான் படமாக்கியிருக்கிறாராம் சந்தோஷ் சிவன்.

ஆகஸ்டில் படத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

Comments