நாளை ஜப்பானில் ஏக் தா டைகர் ரிலீஸ்: ரஜினியை முந்துவாரா சல்மான் கான்!!

Wednesday,6th of March 2013
சென்னை::சல்மான் கான் நடித்த ஏக் தா டைகர் படம் ஜப்பானிய மொழியில் நாளை ஜப்பானில் ரிலீஸ் ஆகிறது.

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைப் நடித்த படம் ஏக் தா டைகர். உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்தது. இதற்கு முன்பு ஆமீர் கானின் 3 இடியட்ஸ் படம் ரூ. 310 கோடி வசூல் செய்தது.

சுதந்திர தினத்தன்று ரிலீஸான ஏக் தா டைகர் படத்தில் ரா ஏஜெண்டான சல்மான் கான் ஐஎஸ்ஐ ஏஜெண்டான கத்ரீனா கைபை காதலிப்பார். இந்த படம் மூலம் தான் வசூல் மன்னன் என்பதை மறுபடியும் நிரூபித்தார் சல்மான் கான்.

Comments