ஆல் இன் ஆல் அழகுராஜா படப்பிடிப்பு தொடங்கியது!!!

Saturday,2nd of March 2013
சென்னை::கார்த்திக் தற்போது வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் 60 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில் அடுத்த படமான "ஆல் இன் ஆல் அழகுராஜா"வை துவக்கி விட்டார்கள். கும்பகோணத்தில் எளிமையாக நடந்த இதன் பூஜையில் தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா. கேமராமேன் பாலசுப்பிரமணியம், இயக்குனர் எம்.ராஜேஷ் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.

படத்தின் பணிகள் குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறியதாவது: "படப்பிடிப்பை முறைப்படி துவக்கி விட்டோம். கும்பகோணம், பொள்ளாச்சி, கோபிச்செட்டிபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம், பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கும். முதலில் டெஸ்ட் சூட் பண்ணுகிறோம். அதாவது படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள லொக்கேஷன்களில் டம்மி ஆர்ட்டிஸ்டுகளை வைத்து படம் எடுப்போம். இதில் ஏற்படும் அனுபவங்களை நிஜ படப்பிடிப்பின்போது பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் இல்லாத காட்சிகளை படமாக்குவோம். பிறகு அவர்கள் போர்ஷனை படமாக்குவோம். எனது எல்லா படங்களையும் போல இதுவும், காமெடி பாதி கதை பாதி என்கிறார் ராஜேஷ்.

Comments