Tuesday,26th of March 2013
சென்னை::பிரபல இசைத் தொலைக்காட்சியான எம் டிவியின் முதலாவது ‘எம் டிவி வீடியோ மற்றும் இசை விருதுகள், இந்தியா ’ வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது.
அதில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்து விஜய் இயக்கத்தில், யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘தாண்டவம்’ திரைப்படத்தின் பாடலான ‘உயிரின் உயிரே’ பாடல் ‘சிறந்த பிராந்திய இசை வீடியோ விருதைப்’ (Best Regional Music Video) பெற்றது. நா. முத்துக்குமார் எழுதி சைந்தவி, சத்ய பிரகாஷ் பாடிய பாடல் இது.
பலத்த போட்டிகளுக்கிடையே ஜி.வி. பிரகாஷ்குமார் இந்த விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment