இப்போதைக்கு சினிமாவை விட்டு வெளியேறும் எண்ணமில்லை- த்ரிஷா!!!

Thursday,7th of March 2013
சென்னை::சினிமாவில் நடிக்க வந்து பத்தாண்டுகளை கடந்தபோதும் இன்னும் மேன்மேலும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புதான் எனக்குள் ஏற்பட்டுள்ளது என்கிறார் த்ரிஷா. அதனால் முன்னணி நடிகர்களுடன் மரத்தை சுற்றி டூயட் பாடியதில் இருந்து தற்போது விடுபடத் தொடங்கியிருக்கும் நான், இனி பேசப்படக்கூடிய வேடங்களில் நடிக்கப்போகிறேன் என்கிறார். அதன் முதல் படிதான் ரம் படம். அந்த படத்தில் 4 கதாநாயகிகள் என்றாலும், நான்தான் மையக்கேரக்டர். அதனால் எனக்கு நடிப்பில் ஸ்கோர் பண்ண நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக நம்முடைய சினிமாக்களில் கதாநாயகர்கள் மொத்த கதையையும் தூக்கி சுமப்பது போல் அந்த படத்தில் நான் சுமக்கிறேன்.

ஏற்கனவே பலதரப்பட்ட கதைகளில் நடித்த எனக்கு இனி மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், இனி நடிக்கிற காலங்களில் மாறுபட்ட த்ரிஷாவாக, அதாவது, கதாநாயகி என்பதை கடந்து, கதாபாத்திரங்களை கருத்தில் கொண்டு நடிக்கப்போகிறேன். தென்னிந்திய சினிமா மட்டுமின்றி, வடஇந்திய படங்களிலும் நடிப்பேன். இப்படி நடித்து நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துவேன் என்று சொல்லும் த்ரிஷாவுக்கு, இப்படி மனசு நிறைய கண்டபடி ஆசைகள ஊற்றெடுத்திருப்பதால், இப்போதைக்கு சினிமாவை விட்டு வெளியேற வேண்டும் என்கிற எண்ணம் இல்லையாம். இன்னும் நீண்டகாலம் நீடிக்க வேண்டும என்று நினைக்கிறாராம்.

Comments