உன் வாழ்வில் அடுத்தவர் கருத்தை திணிக்க விடாதே - புதுமுக நடிகருக்கு அஜீத் அட்வைஸ்!!!

Monday,4th of March 2013
சென்னை::மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்து கிடைத்தும் அதை தானகாவே தகர்த்த நடிகர் அஜீத், தற்போது தன்னுடைய படங்களில் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். அந்த வகையில் 'மங்காத்தா' படத்தை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் புது படம் ஒன்றிலும் பல புதுமுகங்களோடு அஜீத் இணைந்து நடிக்கிறார்.

'சிறுத்தை' சிவா இயக்க இருக்கும் அந்த படத்தில் முனிஷ் என்பவர் அறிமுகமாகிறார். தனக்கு வாய்ப்பு கிடைத்ததற்காக அஜீத்துக்கு நன்றி தெரிவிக்க அஜீத்தை சமீபத்தில் முனிஷ் சந்தித்தார். அப்போது அவரை வாழ்த்திய அஜீத், "கடுமையாக உழைக்கவும். நாணயமாக வரி கட்டவும். குடும்பத்தை, குறிப்பாக மூத்தவர்களை மதித்து நடப்பதுடன அவர்களுடன் நிறைய நேரத்தை செலவிடவும். வருமானத்திலிருந்து ஒரு பகுதியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அடுத்தவர்கள் வாழ்வில் உன் கருத்தை திணிக்காதே. உன் வாழ்வில் அடுத்தவர் கருத்தை திணிக்க விடாதே. நீ யாருடன் பணிபுரிய வேண்டும் என்று வெறும் பணத்தை நிர்ணயிக்க விடாதே. வாழு வாழ விடு. இது என்னுடைய அறிவுரை அல்ல, என் வாழ்கை எனக்கு கற்று கொடுத்த அனுபவம்." என்று பயனுள்ள அறிவுரையையும் முனிஷுக்கு சொன்னாராம்.

அஜீத்தின் வாழ்த்துடன் அவர் கூறிய அறிவுரையை போனசாக பெற்றுக்கொண்ட முனிஷ், தற்போது பெரும் நம்பிக்கையுடன் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்

Comments