கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘வணக்கம் சென்னை!!!

Saturday,30th of March 2013
சென்னை::தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும், பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மற்றும் சந்தானம், மனோபாலா, ஊர்வசி, ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் இந்த படம் தயாராகி வருகிறது.

அனிருத் இசையமைக்க நா. முத்துக்குமார், மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்கள். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னை, தேனி மற்றும் இவற்றின் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

Comments