சென்னை::நடிகர் விஜயின் நடிப்பில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் காதல்-சஸ்பென்ஸ் நிறைந்த தலைவா திரைப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் ஆஸ்திரேலியா நாட்டில் எடுக்கப்பட வேண்டிய சீன்கள் மட்டும் உள்ளன. இந்த படத்தில் பாலிவுட் நடிகை ராகிணி நந்த்வானி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். நடிகர் விஜயுடன் நடித்தது குறித்து அவர் கூறியதாவது:-
தலைவா படத்தில் நடித்தது எதிர்பாராததாகவும், மிகவும் எளிதாகவும் இருந்தது. ஏன் என்றால் நான் ஒரு வட இந்திய பெண்ணாகவே இதில் நடித்தேன். ஒவ்வொரு முறையும் விஜயுடன் நடிக்கும் போது எனக்கு படபடப்பாக இருக்கும். எனக்கு இந்த படத்தில் நடிப்பது கடினமாக இல்லை ஏன் என்றால் நான் வட இந்திய பெண்ணாகவே தான் நடித்தேன். எனது வசனங்கள் முழுவதும் இந்தி தான்.
இந்த படத்தில் நான் ஏதோ வந்து போகும் கதாபாத்திரம் அல்ல. படத்தில் 2-வது முக்கிய கதாபாத்திரம். இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையில் விஜயுடன் ஒரு பாடலில் நடித்து உள்ளேன். விஜயுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. அவர் மிகவும் எளிமையானவர். அதே சமயம் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர். இவ்வாறு ராகிணி நந்த்வானி கூறினார்.
Comments
Post a Comment