கொடிவீரனை நீக்கினார் பாரதிராஜா!!!

Sunday,10th of March 2013
சென்னை::பாரதிராஜா இயக்கி வரும் புதிய படம் "அன்னக்கொடியும் கொடிவீரனும்". புதுமுகம் லக்ஷ்மன், கார்த்திகா, நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங், மற்றும் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் முதலில் பார்த்திபன் நடிப்பதாக இருந்தது. அவரை நீக்கி விட்டு இயக்குனர் அமீர் நடிப்பதாக அறிவித்தார். தேனியில் நடந்த துவக்க விழாவுக்கும் அமீர் சென்றார். படத்துக்காக பெரிய மீசையெல்லாம் வளர்த்திருந்தார். பிறகு அவரையும் நீக்கிவிட்டு லக்ஷ்மன் என்ற புதுமுகத்தை நடிக்க வைத்தார். இப்போது படத்தின் தலைப்பில் இருந்தே கொடிவீரனை நீக்கி விட்டார்.

அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற பெயர் ஏதோ காமிக்ஸ் புத்தக தலைப்பு மாதிரி இருப்பதாக நண்பர்கள் பலரும் சொல்ல இதுபற்றி தீவிரமாக ஆலோசித்த பாரதிரஜா படத்தின் தலைப்பில் கொடிவீரனை நீக்கிவிட்டு "அன்னக்கொடி" என்று படத்தின் தலைப்பை சுருக்கி விட்டார். இனி படத்தின் பெயர் "அன்னக்கொடி

Comments