Saturday,30th of March 2013
சென்னை::எல்லா நடிகைகளுக்கும் சல்மான் கானுடன் நடிக்க ஆசை என்று தெரிவித்தார் தமன்னா.
தமன்னாவின் ஹிம்மத்வாலா விரைவில் வெளியாகிறது. அஜய் தேவ்கானுடன் ஜோடியாக நடித்திருக்கும் ஹிம்மத்வாலா தமன்னாவுக்கு முக்கியமான படம். தமன்னா அறிமுகமானது இந்தியில். முதல் படம் சரியாகப் போகவில்லை. அப்படிதான் தமிழுக்கு வந்தார். கேடியில் தமன்னா, இலியானாவை நடிக்க வைத்தார் ஜோதி கிருஷ்ணா. இருவருமே தமிழில் மார்க்கெட் இன்றி தெலுங்குக்கு சென்று ஜெயித்தனர்.
ஒருகட்டத்தில் தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையானார். இந்திப்பட உலகின் பார்வை தமன்னா மீது விழுந்தது. அப்படி கிடைத்ததுதான் சஜித் கான் இயக்கியிருக்கும் ஹிம்மத்வாலா.
தமன்னாவின் வெண்ணெய் அழகு படம் வெளிவரும் முன்பே பிரபலமாகியிருக்கிறது. சல்மான் கானுடன் நடிக்க விருப்பமா என்ற ரெடிமேட் கேள்வியை இவரிடமும் பாலிவுட் ஊடகம் கேட்டது. பெரிய சிரிப்பொன்றை பதிலாக தந்தவர், நான் மட்டுமா... ஒவ்வொரு நடிகையும் சல்மானுடன் நடிக்க ஆர்வமாகதான் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
சனா கான் ஏற்கனவே இப்படியொரு தகவலைதான் கூறியிருக்கிறார். சல்மானின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு தனது மென்டல் படத்தில் நடிக்க வாய்ப்பளித்திருக்கிறார் சல்மான்.
Comments
Post a Comment