Wednesday,20th of March 2013
சென்னை::வாகை சூடவா இனியா, அதன் பின் அருள் நிதி, சாந்தனு போன்ற இளம் ஹீரோக்களுடன் தான் நடித்தார். ஆனால், இப்போது நடித்துள்ள, "மாசாணி படத்தில், ரீ-என்ட்ரியாகியுள்ள ராம்கிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவரிடம், "மாஜி ஹீரோவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறீர்களே. இது மார்க்கெட்டை பாதிக்காதா என்று கேட்டால், "நான் நடிகர்களை கருத்தில் கொண்டு, எந்த படத்திலும் நடிப்பதில்லை என்கிறார். "மாசாணி படத்தை பொறுத்தவரை, நான் டைட்டில் ரோலில் நடிக்கிறேன். ராம்கி என் காதலராக நடிக்கிறார். அவர், என்னை விட ரொம்ப சீனியர் என்றாலும், அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறி, இளம் நடிகர்கள் போலவே நடித்துள்ளார். எனக்கும் நிறைய டிப்ஸ் கொடுத்தார். அந்த வகையில், ராம்கியுடன் நடித்தது சந்தோஷமான விஷயமே என்கிறார் இனியா.
Comments
Post a Comment